தோடம்பழ உறுப்பினர் கல்முனை மாநகர சபையின் வரி அளவிடும் ஊழியர் மீது தாக்குதல் நடத்தினார் என்பதற்காக சாய்ந்தமருதில் குப்பை அள்ளும் நடவடிக்கையினை இடைநிறுத்தலாமா? அவ்வாறு குப்பை அள்ள முடியாதுள்ளது என்று ஒரு சட்டத்தரணியாக இருந்து கொண்டு மாநகர முதல்வர் றகீப் கூறுவது குறித்து வெட்கப்படுகிறேன் என முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீட உறுப்பினரும் அம்பாரை மாவட்ட பொருளாளருமான ஏ. சி. யஹ்யாகான் தெரிவித்துள்ளார்.
மாநகர ஊழியரை தாக்கினர் என்றால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து சிறையில் அடைக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு மக்களை பழிவாங்க நினைப்பது எவ்வளவு முட்டாள்தனம்.
கடந்த தேர்தலில் சாய்ந்தமருதில் உயிரை பணயம் வைத்து கட்சியின் வெற்றிக்காக பாடுபட்டோம். 2700 வாக்குகளைப் பெற்றும் ஒரு உறுப்பினரை பெற முடியாது போனது. ஆனாலும் எமது வாக்குகளாலே கட்சி வெற்றி நிலைக்கு வந்தது. இதனை யாரும் மறுக்க முடியாது.
தோடம்பழ உறுப்பினர்களின் செயற்பாடுகளுக்காக சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் பலியாக முடியாது. அந்த மக்களுக்குரிய சேவை கிரமமாக நடைபெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை முதல்வர் றகீப் எடுக்க வேண்டும். ஆனாலும் எமது வாக்குகளாலே கட்சி வெற்றி நிலைக்கு வந்தது. இதனை யாரும் மறுக்க முடியாது.
தோடம்பழ உறுப்பினர்களின் அசிங்கமான செயற்பாடுகளுக்காக சாய்ந்தமருது மக்கள் ஒருபோதும் பலியாக முடியாது. அந்த மக்களுக்குரிய சேவை கிரமமாக நடைபெற வேண்டும். அதற்கு உரிய நடவடிக்கையை முதல்வர் றகீப் எடுக்க வேண்டும்.
எது எப்படி இருப்பினும் முதல்வர் றகீப் அவர்கள் தோடம்பழ உறுப்பினர்களுடன் இரகசியமாகவும் மிகவும் நெருக்கமான உறவுகளை பேணிவருகின்றமையை சாய்ந்தமருது மக்கள் உட்பட அனைவரும் நன்கு அறிந்தும் வைத்துள்ளனர்.
Post A Comment: