மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்
 
நீங்கள் பின்வரிசையில் இருப்பதுவும் முன்வரிசையில் இருப்பதுவும் ஒன்றுதான், ஒன்று நீங்கள் சுயாதீனமாக எதிர்க்கட்சி ஆசனங்களில் இருக்கலாம், அல்லது பதவிகளை ஏற்று முன்வரிசையில் அமர்ந்து கொள்ளலாம்.

அமைச்சரவையில் இருந்து இயன்றவற்றை செய்யுங்கள் அல்லது சுயாதீனமாக எதிர்க் கட்சியில் அமர்ந்து அழுத்தம் கொடுங்கள்.

உங்களை இரண்டும் கெட்டான் நிலையில் வைத்து ஆளும் கட்சியும் எதிர்க் கட்சியும் தேர்தல் அரசியல் செய்வதில் இருதலைக் கொல்லி எறும்பின் நிலையில் முஸ்லிம் சமூகம்!

நீங்கள் ஒட்டு மொத்தமாக ஐக்கிய தேசியக் கட்சி அரசில் சங்கமமாகியுள்ளதாக எதிரணியினர் கருதுவதால் சமூகத்தை சீண்டுகிறார்கள்.

உங்களையோ சமூகத்தையோ பாதுகாக்க முடியாத அரசு அலைமோதும் பேரினவாத பேரலைகளுக்கு தலைசாய்த்துக் கொண்டிருப்பதாகவே தெரிகிறது.

இப்பொழுது பேரம் பேசும் வலிமையை இழந்துள்ளீர்ர்கள், யாருமே உங்களை வலிந்து அழைப்பதாகவும் தெரியவில்லை, மாறாக சௌகரியமாக அவர்களது பேரின அரசியல் நாடகங்களை அரங்கேற்றிக் கொண்டிருக்கின்றார்கள்!

Post A Comment: