என்.எம்.றிஸ்மீர்

கல்முனை மாநகர முதல்வருக்கு சாய்ந்தமருது சுயேட்சை குழு உறுப்பினர் என்.எம்.றிஸ்மீர் விடுக்கும் அன்பான வேண்டுகோள்...

சாய்ந்தமருது பிரதேசத்தில் கல்முனை மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் சேவை கடந்த சில தினங்களாக ஸ்தம்பிதமடைந்துள்ளமை குறித்து தெளிவுபடுத்தும் முதல்வர் ஏன் கீழ் வரும் எனது கேள்விகளுக்கு தெளிவு பெற்றுத்தருவாரா?

🔍கடந்த 2016 ஆண்டுமுதல் , கல்முனை பொதுசந்தையின் மாதாந்த வாடகை கட்டணம் தொடர்பாக, கிழக்கு மாகாண ஆளுநர் மற்றும் Srilanka valuation Department யினால் முன்வைக்கப்பட்டன. கட்டாயம் அமுல்படுத்தப்படவேண்டிய மாதாந்த வாடகை தொடர்பாக உங்களின் வகிபாகமும் அதன் இருட்டடிப்பிற்கான காரணமும் என்ன?அதனால் நிர்ணயிக்கப்பட்ட ரூபா 16,000 தொகை ஏன் அறவிடப்படுவதில்லை??? 

இதனால் மாதம் ஒன்றுக்கு கல்முனை மாநகர சபைக்கு 50 லட்சம் நஷ்டம் ஏற்படுவது சம்பந்தமாக , ஏன் இன்னும் பொதுமக்களின் கவனத்திற்க்கு கொண்டுவரப்படவில்லை?

அத்துடன் வாடகை செலுத்தப்படாமல் அதன் நிலுவைகள் கடந்த 1-10 வருடங்களாக காணப்படுகின்ற கடைகளுக்கு ஏன் சட்டநடவடிக்கைகள் இன்னும் எடுக்கப்படவில்லை??? கல்முனை மாநகர சபைக்கு சொந்தமான கடைகள் ஏன் தனிப்பட்டவர்களின் பெயர்களில் உரிமை மாற்றம் செய்யப்படுகிறது?? அதற்கான உங்களின் நடவடிக்கைதான் என்ன?

🔎மாநகரசபைக்கு சொந்தமான 50 கோடி பெறுமதியான சொத்து ஏன் இன்னும் வெறும் ரூபா 20,000க்கு தனியார் வங்கி ஒன்றுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளது? கல்முனை மாநகர சபையில் இதன் வாடகையாக ௹பா 200,000ஆல் அதிகரிப்பதாக முடிவெடுக்கப்பட்டும் ஏன் இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை? இதற்கான உங்கள் நடவடிக்கை என்ன??

🔎இன்னும் உங்களின் மாநகர சபையின் மாதாந்த கணக்கறிக்கை வெளிப்படைத்தன்மையின்மையின்மையின் காரணங்கள் என்ன? நிதிக் குழுவின் அனுமதி இன்றி செலவுகள் செய்யப்படுவதன் காரணம்தான் என்ன? உயர் அதிகாரிகளின் சொந்த நடவடிக்கைகளுக்கு மாநகர சபையின் வளங்கள் பயன்படுத்தப்படுவது மற்றும் வளத் துஷ்பிரயோகம் சம்மந்தமான முறைப்பாடுகளுக்கு ஏன் எதுவித நடவடிக்கைகளும் எடுக்காமல் மெளனியாக இருக்கின்றீர்கள் ?

🔎கல்முனை மாநகர சபைக்குரிய வரியிறுப்பாளர்களாகிய சாய்ந்தமருது மக்களில் பெரும்பான்மையானோர் கடந்த சில வருடங்களாக சோலை வரி கட்டாமலும் பெரும்பாலான வர்த்தக நிலையங்களுக்கு வியாபார அனுமதிப்பத்திரம் பெறாமலும் கல்முனை மாநகர சபையின் சேவைகளைப் பெற்று வருவதென்பது எந்தளவுக்கு நியாயமானது என்று குற்றம் சுமத்தும் நீங்கள் ஏன் சோலைவரி,வியாபார அனுமதிப்பத்திர கட்டணம் , முத்திரை கட்டணம் தொடர்பான கடந்த 5 வருட காலத்தின் பிரதேச அடிப்படையிலான வருமான புள்ளிவிபர அறிக்கையை சமர்ப்பிக்க முடியாதுள்ளது?

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட ஏனைய பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் வரிகளைச் செலுத்துகின்றபோது, அந்த நிதியில் இருந்து சாய்ந்தமருது மக்கள், கல்முனை மாநகர சபையின் சேவைகளை எதிர்பார்ப்பது தர்மமாகாது என்பதை ஏற்றுக் கொள்வீர்கள் என எந்தவித புள்ளிவிபர ஆதாரங்களை முன்வைக்காமல் ஒரு ஊரை குற்றம் சுமத்துவது உங்களது வங்குரோத்து அரசியலையும் பழிவாங்கும் எண்ணத்தையும் பறைசாற்றுகின்றது.

மறந்துவிட வேண்டாம் உங்கள் மேயர் பதவி , சாய்ந்மருது போட்ட பிச்சை என மேலும் அவரின் வேண்டுகோளின் தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்.எம்.றிஸ்மீர்
கல்முனை மாநகர சபை உறுப்பினர்
சாய்ந்தமருது சுயேட்சை குழு

Post A Comment: