சட்டபூர்வமற்ற ஒரு உப பிரதேச செயலகத்துக்கு கணக்காளர் ஒருவரை நியமித்தது எந்த வகையில் பொருத்தமானது ?

கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் நியமனம்.

09.07.2019ம் திகதிய "தமிழ் MIRROR' நாழிதளின் 2ம் பக்கத்தில் கௌரவ பிரதமர் அவர்கள் கௌரவ வஜிர அபயவர்த்தன அவர்களிடம் கணக்காளர் ஒருவரை நியமிக்குமாறு சொன்னதாக செய்தி வந்தது.

இச்செய்தியை அறிந்த நான்,

தகவல் அலுவலர், 
பிரதம
மந்திரி அலுவலகம்,
அலரி மாளிகை,
காலி விதி, 
கொழும்பு.02.

எனும் முகவரிக்கு 2016ம் ஆண்டின் 12ம் இலக்க தகவலறியும் சட்டத்தின் கீழ் பின்வரும் கடிதத்தை எழுதி பதிவுதபால் மூலம் இன்று அனுப்பினேன். அதில் -

தங்களின் மேலான கவனத்திற்கு, கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு தனியான கணக்காளரை நியமித்து கடமைகளை விரைவில் பொறுப்பேற்குமாறு கௌரவபிரதமர் அவர்கள் கௌரவ அமைச்சர் வஜிர அபயவர்த்தன அவர்கள்முன் வாக்களித்ததாக தமிழ் மிரர் 09.07.2019ம் திகதிய செய்தித்தாளின் 2ம் பக்கத்தில் அறிந்தேன்.(P1) இன்று S. சந்தண எனும் ஒரு கணக்காளர் கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு வந்து போனதாகவும் அறிகின்றேன்.

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் பாராளுமன்றத்தின் 1992ம் ஆண்டின் 58ம் இலக்க தத்துவங்கள் கைமாறல் (பெரும்பாக செயலாளர்) சட்டத்தின் 9ம் பந்தியில் குறிப்பிட்ட படி பிரதேச செயலாளரே உப பிரதேச செயலாளருக்கு கடமைப்பட்டியல் சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. (P2)

மேற்படி தகவல்களின் மூலம் 1992ம் ஆண்டின் 58ம் இலக்கச் சட்டத்தை மீறும் வகையில் கௌரவ பிரதமர் அவர்களும், பொறுப்பு வாய்ந்த அமைச்சரும் செயற்பட்டுவதாக உணர்கின்றேன்.

எனது தகவல் கோரிக்கைகள்:

01. கல்முனை உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் ஒருவரை நியமிக்கூமாறு கௌரவ வஜிர அபயவர்த்தன அமைச்சர் அவர்கட்கு கௌரவ பிரதமர் அவர்கள் கட்ளையிட்டாரா?

02.அவ்வாறு கட்டளையிட்டிருந்தால் 1992ம் ஆண்டி 58ம் இலக்க பாராளுமன்ற சட்டத்தை மீறியதாக அமையாதா?

03.நாட்டின் எந்தச் சட்டத்தின் கீழ் உப பிரதேச செயலகத்திற்கான கணக்காளர் நியமன விடயமாக பொறுப்பு வாய்ந்த அமைச்சரை செயற்படுமாறு கௌரவ பிரதம மந்திரி கட்டளை பிறப்பித்துள்ளார்?

04.கடமைப்பட்டியலில்லாத கல்முனை உப பிரதேச செயலகத்தில் எவ்வாறான கடமைகளை செய்யுமாறு கணக்காளர் பணிக்கப்பட்டுள்ளார்?
அந்த கடமைப்பட்டியலின் சான்றுப்படுத்தப்பட்ட ' பிரதியை தருக.

மேற்படி தகவல்களை 14 நாட்களுக்குள் ஆங்கிலத்தில் தருக.

தகவல் கோரிக்கையாளர்: ...
A.M. நஸீர்

என்று எழுதி அனுப்பியுள்ளேன்.

நமது தலைவர்கள், பிரதிநிதிகள் மேற்படி தகவலை ஏன் பிரதமரிடம் கேட்காமல் மௌனிக்கின்றார்கள்?

எந்தச் சட்டத்தாலும் உப பிரதேச செயலகத்திற்கு கணக்காளர் போட முடியாது. ஹுசைன்தீன் அவர்கள் கணக்காளராக இருந்தபோது அப்போதைய அமைச்சர் ஜோண் செனவிரத்ன அவர்கள் கல்முனைக்கு வந்து முயற்சி செய்தும் இயலாமல் போன விடயம்.

நம்பிக்கை இல்லா பிரேரணைக்கு TNA யின் ஆதரவை பெற சாகபோறவனின் நாவில் தேன் வைக்கும் நிகழ்வுதான் தனியான கணக்காளர் நியமனம் எனும் மாயை.

சட்டம் அதன் வேலையைச் செய்யும்.

ஹாஜி நஸீர்

Post A Comment: