எஸ் எச் எம் பிர்தௌஸ்

முஸ்லிம்களின் அதிகார மையமாக கல்முனை எப்போதும் இருக்கவேண்டும் என்றே மறைந்த மாபெரும் தலைவர் மர்ஹூம் MHM அஷ்ரப் எப்போதும் விரும்பினார் ,அதனாலேயே கரையோர மாவட்டம் என்பது கூட கல்முனை கரையோர மாவட்டம் என அவரால் அப்போது பெயரிடப்பட்டது.

ஆனால் அவரது மறைவுக்கு பின்னர் காலத்துக்கு காலம் தேர்தல்கள் வரும்போதெல்லாம் பதவிகளை அடைய விரும்பியோரால் அவரவர் நினைத்தவாறு எல்லாம் கல்முனையை துண்டாடும் விடயம் தேர்த்ல் வெற்றிக்காக தேர்தலில் போட்டியிட்டவர்களால் விலைபேசப்பட்டது,இதுதான் உண்மை ,

மருதூருக்கு சபை தருவோம் என கூறியது கூட தேர்தல் வெற்றியை மையமா வைத்தேதான் என்பது மறுக்க முடியாத உண்மை சாய்ந்த மருது மக்களால் கடந்த காலத்தில் தனி பிரதேச விடயம் உறுதி பெற்ற போது கூட மறைந்த தலைவர் மருதூரில் நடந்த கூட்டம் ஒன்றில் மருதூர் பள்ளி மரைக்காயர் அன்வர் ஹாஜியாரின் வீட்டின் அருகில் அன்று நடந்த போது கூறினார் ' மருதூருக்கு பிரதேச செயலகம் தருகின்றேன் ஆனால் நான் உயிரோடு உள்ளவரை பிரதேச சபையை தரமாட்டேன் என்று '

இது அன்று கட்சியின் போராளிகளாக இருந்து இப்போது வேறு முகாம்களில் உள்ள முன்னாள் முன்னணி போராளிகள் யாவரும் அறிந்த விடயம் இதை இப்போது மருதூர் தோடம்பழ அணியில் உள்ள முன்னாள் SLMC முண்ணனி போராளிகளான மஹ்சூம் இஸ்மாயில் ,பிர்தௌஸ் அன்வர் ஹாஜியார் ரிபாஸ், ரியாஸ் போன்ற அணைவரும் அறிவர் ,

ஆனால் தேர்தல் வேட்பாளர்களாக களமிறங்கியோர் அப்போது தலைவரின் வாக்குறுதிகளை மறந்து கல்முனை கரையோர மாவட்ட கோரிக்கைகளையும் மறந்து நாங்கள் வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு பின்னர் தேர்தல் பிரசாரத்தில் இருந்த ரனிலையும் கொண்டுவந்து எழுதி கொடுத்து வாசிக்க வைத்துவிட்டு வென்ற பின்னர் தற்போது கொடுத்த வாக்குறுதிகளை எல்லாம் மறந்து விட்டு கல்முனையை பிரித்து கொடுக்க தலைவர் விரும்பினார் என சொல்வது மக்களை ஏமாற்றுவதை விட மறைந்த தலைவருக்கு செய்யும் அவமாணமாகும்.

அமைச்சர் அதாவுள்ளா கூட கல்முனையை பிரித்து பிரச்சினைக்கு தீர்வு கான முயன்றபோது அதை அப்போது தாராளமாக விமர்சித்து தடுத்து நிறுத்தியவர்கள் எம்பகுதியை சேர்ந்தவர்கள் என்பதை இலகுவில் இவர்கள் மறந்து விட்டனர்,

பிரச்சினைகள் விஸ்வரூபம் எடுத்து கை நழுவி போகின்றபோது சந்தைப்படுத்த மறைந்த தலைவரை இவர்கள் பயண்படுத்த முனைவது கண்டிக்கப்பட வேண்டும்.

மறைந்த தலைவர் எப்போதும் தனது அரசியல் வாழ்வில் ஆசைகாட்டி வாக்கு கேட்டதே இல்லை ,ஆதரவாளர்களுக்கு வேலை தருவேன் அபிவிருத்தி செய்வேன் என வாக்குறுதி கொடுத்து அவர் மக்களை ஏமாற்றாது சந்தர்ப்பம் கிடைத்தபோது வேலை வாய்ப்பு அபிவிருத்தி என அள்ளி வளங்கியே கட்சியை வளர்த்தார் ,

அதிலும் தன்னை எதிர்த்த பெரும் பெரும் எதிரிகளை கூட கவர்ந்து தனது அணியில் இறைத்து இந்த இயக்கத்தை பலப்படுத்தி யார் இதுதான் வரலாறு ,

ஆனால் பின்னாளில் வந்தவர்களால் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை கூட வழங்க முடியாமல் தங்களையும் காப்பாற்ற முடியாமல் இப்போது திண்டாடும் வேளையில் சூழ் நிலைக்கைதிகளாக இருந்து கொண்டு இயலாமைகளை மூடி மறைக்க முனைகின்றனர்.

நீங்கள் மறைந்த தலைவரை ஆதாரம் காட்டி ஆலோபனம் செய்வதை விடுத்து தலைமேல் போய்க்கொண்டிருக்கும் பிரச்சினைகளுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றியாவது தீர்வுகளை தாமதியாது வழங்குங்கள் ,

கல்முனைக்கு கணக்காளர் ஒருவர் வந்து போகின்றார் ,யாரையோ ஒருவரை காப்பாற்ற போய் பதவிகளில் இருந்து அணைத்து அமைச்சர்களும் பதவிகளை ராஜினாமாச்செய்து அடுத்த தேர்தலை எதிர்பார்த்து தூக்கி வீசியதாக கூறி வெற்றி களிப்பில் உள்ளீர்கள்.

ஆனால் அரசியல் சூழல் நம்பிக்கை இல்லா பிரேரனை வெற்றி அரசாங்கத்தை பாதுகாத்தல் என்ற சதுரங்க காய் நகர்த்தலில் தமிழர் அரசியலிலும் இலங்கை தேசிய அரசியலிலும் துறைபோன தலைமைகளான சம்பந்தன் ஐயா சுமந்திரன் ஐயா போன்றோர் தங்களது காய்களை பதவிகளே இன்றி மிக நிதானமாக ஆரவாரமின்றி நகர்த்தி வருகின்றனர்,

அவர்கள் ஊருராக மேடை போடுவது இல்லை ,விவாதங்களில் வந்து மூளைக்கும் தலைக்கும் தொடர்பின்றி பேசுவதும் இல்லை ,ஆனால் உரிய வேளையில் தங்கள் காரியங்களை செய்து விடுபவர்கள் ,

அவர்கள் கோடிஸ்வரனும் இல்லை ,வியாளேந்திரன் போன்ற வெட்டி வீரர்களும் இல்லை என்பதை மனதில் கொண்டு எதிர்வரும் 21ம் திகதிக்கு முன்னர் அமைச்சரவையில் நாட்டில் என்ன நடைபெறும் என்பதை உணர்ந்து அவற்றில் பங்கெடுத்து கல்முனைக்கான விடயத்தையும் மருதூருக்கான விடயத்தையும் தேசிய ரீதியில் முஸ்லிம்களுக்கான விடயங்களையும் செயற்படுத்துங் கள்.

இல்லையேல் யாவும் நிறைவடைந்த பின்னர் நாங்கள் மக்களுக்காக ரிசாட்டுக்காக ஹிஸ்புல்லாஹ் ஆசாத் சாலிக்காக பதவிகளை துறந்து அவர்களை காப்பாற்ற சென்ற வேளையில் எங்களுக்கு தெரியாமல் எல்லாம் நடந்து விட்டது என மக்களிடம் வந்து மீண்டும் ஒருதரம் ஒப்பாரி வைக்க வேண்டி வரலாம்.

Post A Comment: