கியாஸ் ஏ. புஹாரி

இளைஞனாக இருக்கும் காலம் தொட்டே வீதியிலறங்கி அரசியலுக்காக, கட்சிக்காக போராடிய ஒரு தியாகிதான் முன்னாள் இராஜாங்க அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் அவர்கள். ஒரு சமூகத்தின் வரலாறு அறிந்த வலிமைபெற்றுவரும் அரசியல்வாதி இவரென்றால் அதுவே நிதர்சனம்!

கோடின கோடிகளுக்கு அடிமையாகி சமூகத்தை பலிக்கேடயமாக்காது, தனது பிரதேசத்தின் வரலாற்றுப் பாரம்பரியத்தை அறிந்து நிதானப்போக்கில் செயற்படுகின்றார் என்பது அவரது அண்மைய நிகழ்வுகளில் தெளிவாகின்றது.

கல்முனைப் பிரதேசத்தில் உப பிரதேச செயலகம் தரமுயர்த்தக் கோருகின்ற விடயத்தில் பல பிரயத்தணங்கள் சமூக ரீதியிலும், சமய ரீதியிலும் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அவற்றை அச்சாணியாக்கி அமைதியாக சத்தியாக்கிரகத்தில் பெரும் பங்கேற்று தகர்த்தெறிந்தார்.

அங்கு வரையப்பட்ட வீண் வாதங்களின் பின்னணியில் தான் புரிகின்றது, சாய்ந்தமருதுக்கான தனி பிரதேச சபை வழங்கப்படாமல் இருந்தமையின் உள்ளக நன்மையென்ன என்பது.

பொதுவாக சிந்திப்பின் நாட்டிலுள்ள சிலரிடம் சமத்துவம் விழுங்கப்பட்டாலும் ‘நாடு’ எனும் சொல் சமத்துவம் கொண்டதாகும். அதனடிப்படையில் தான் தாம் சார்ந்தோரின் குறுகிய தேவைப் பூர்த்தியாவதினால் தனது சமூகத்தின் எதிர்காலம் கேள்விக் குறியாக்கப்படக்கூடாது! எனும் நோக்கிலேயே சாய்ந்தமருது பிரச்சினையும் இழுத்தடிப்புச் செய்யப்பட்டுள்ளது போல் தெரிகின்றது.

உண்மையிலேயே, இது விடயங்களை பார்க்கையில் ஹரீஸ் எம்.பி. வரவேற்புக்குரியவர். அவரின் சில அரசியல் சூட்சுமங்கள் பலரும் அறியாத ஒரு புதிர்.

2001 ஆம் ஆண்டு காலப் பகுதியில் பாராளுமன்றம் பிரவேசித்த அவர் கிட்டத்தட்ட இரு தசாப்தங்கள் அரசியலில் முதிர்ச்சி பெற்றவராவார்.

அண்மையில் சில மாதங்களுக்கு முன்னார் இளைஞர்களை தன்னுடன் கைகோர்க்கும் ‘மெஸ்ட்ரோ’ வின் இளைஞர் ஒன்றுகூடல் செயற்றிட்டத்தினை மேற்கொண்டு வந்தார்.

அதுபோல, கடந்த 52 நாள் ஆட்சிமாற்ற பிரச்சினையின் போதும் அ.இ.ம.க மற்றும் மு.கா.வின் ஒன்றித்த முடிவுக்கும் வழிகோலாக இருமுனையில் ஒன்றித்து நின்றவர் ஹரிஸ் எம்.பிதான் என்பது சில வட்டாரங்களினூடாக அறியக் கிடைத்த தகவல்.

மேலும், அடிக்கடி ஊடகங்களிலும், பாராளுமன்றிலும் ஆக்ரோஷமாக இந்த சமூகத்தின் மீது அதீத அக்கறையை வெளிக்காட்டியும் வருகின்றார்.

இவை தவிர தற்போதைய ஒரு நெடும் பயணமாக கல்முனை விவாகரம் குறித்த தெளிவூட்டலையும், ஆதரவினையும் ஒவ்வொரு ஊர்களிலும் நாசுக்காக மேற்கொள்கின்றார்.

அக் கூட்டங்களில் அவர் உரையாற்றும் விதம், இந்த சமூகத்தின் மீது அவருக்குள்ள அதீத அக்கறையை வெளியுணர்வு செய்கின்றது. இப்படி நெடுந்தொடரில் அரசியலுக்கு அப்பால் சிந்திக்கும் ஹரீஸ் எம்.பி. மு.கா. பிரதித் தலைவர்களில் ஒருவராக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் ஒரு விடயம் தெளிவாகின்றது. அதாவது, இனிவரும் காலங்களில் கட்சிக்கு ஊடாக பயணிக்காமல் தனித்து நின்றாலும் தன்னுடன் சாரி சாரியாக மக்கள் இருப்பார்கள் என்ற தன்னம்பிக்கை ஹரீஸ் எம்.பியின் மனதில் உதிக்கின்றமை புலனாகின்றது.!

எது எப்படியோ கட்சிகளின் சாயங்களுக்கு அப்பால் கிழக்கில் இனம் தவிர்ந்து பிரதேசம் காப்பதற்கு நிச்சயம் இவர் போன்ற தலைமை வேண்டும்!.

Post A Comment: