கல்முனை வடக்கு உப பிரதேச செயலக உருவாக்கத்தின் போது கல்முனை முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் குறித்து அட்டாளைச்சேனை மக்களுக்கு விளக்கமளிக்கும் கூட்டம்; இன்று (07) ஞாயிற்றுக்கிழமை அட்டாளைச்சேனை ஜும்ஆ பெரிய பள்ளிவாசலில் தலைவர் சட்டத்தரணி எம்.எஸ்.ஹனூன் (ஜுனைத்தீன்) தலைமையில் இடம்பெற்றது.
இக்கூட்டத்தில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம் நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான தமீம் ஆப்தீன், ஏ.எம்.அமீன் மற்றும் பழில் (பீ.ஏ), கல்முனை பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ. அஸீஸ், தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி.ஜெளபர், பள்ளிவாசல் தலைவர்கள், கல்விமான்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அட்டாளைச்சேனை மக்களுக்கு கல்முனை பிரதேச செயலக விவகாரம் சம்மந்தமாக தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளர் எச்.எம் நிஜாம் அவர்களினால் விளக்கமளிக்கப்பட்டது.
கல்முனை வடக்கு உப பிரதேச செயலகம் தரமுயர்த்தலினால் கல்முனை முஸ்லிம்களுக்கு ஏற்படப்போகும் பாதிப்புக்கள் குறித்து முன்னாள் இராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெளிவூட்டினார்.
இதனை அடுத்து அட்டாளைச்சேனை மக்கள் வடக்கு உப பிரதேச செயலக தரமுயர்த்தல் விவகாரத்திற்கு எதிராக கல்முனை முஸ்லிம் மக்களுக்கு தங்களது பேராதரவினை இதன்போது பிரகடணம் செய்தனர்.







Post A Comment: