12 உலகக்கிண்ண கிரிக்கட் தொடரின் அரையிறுதிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள அணிகள் மோதிக்கொள்ளும் போட்டி விபரங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளன.
இந்தியா ,அவுஸ்ரேலியா ,இங்கிலாந்து ,நியூசுலாந்து ஆகிய நான்கு அணிகள் அரையிறுதிக்கு தெரிவாகியுள்ளன
இதன்படி அரையிறுதியில் மோதிக்கொள்ளும் அணிகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன
இதன்படி அரையிறுதியின் 1வது போட்டி இந்தியா மற்றும் நியூசுலாந்து ஆகிய அணிகள் மோதவுள்ளன
இந்த போட்டி எதிர்வரும் 9 ம் திகதி இடம்பெறவுள்ளது
அரையிறுதியின் 2 வது போட்டியில் இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய அணிகள் மோதவுள்ளன
இந்த போட்டி எதிர்வரும் 11 ம் திகதி இடம்பெறவுள்ளது
இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றிபெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதவுள்ளமை குறிப்பிடத்தக்கது.மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள் எம்மோடு.


Post A Comment: