
கல்வியியல் கல்லூரிகளிலிருந்து பயிற்சிகளை முடித்து வெளியேறும் பட்டதாரிகளுக்கு உரிய காலத்தில் வேலை வாய்ப்பை வழங்க வேண்டும் என கல்வி இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கண்டியில் இடம் பெற்ற நிகழ்வில் தெரிவித்தார்.
கண்டி பெரதெனியாவில் உள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் நேற்று முன்தினம் இடம்பெற்ற தேசிய நிகழ்வொன்றில் கலந்து கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இன்று எமது கல்வி அமைச்சின் ஊடாக நாடளாவிய ரீதியில் இரண்டாம் கட்டமாக """அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை """என்ற வேலைத்திட்டத்தின் கீழ் 250 பாடசாலைகள் பரிந்துரை செய்யப்பட்டது.
இதனால் கிராம புற பாடசாலைகள் மற்றும் கல்வியியல் கல்லூரிகள் வளர்ச்சி கண்டுள்ளது.
இதற்காக கல்வி அமைச்சு முதல் கட்டமாக 200 பாடசாலைகளை அபிவிருத்தி செய்துள்ளது.இரண்டாம் கட்டமாக 250 பாடசாலைகள் உள்வாங்கப்பட்டுள்ளன.
இன்று கல்வி அமைச்சின் ஊடாக 26 கற்கை நெறிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்து போன யுத்த வடுக்களிலிருந்து மீண்டு சுமார் 5 வருடங்களாக எமது அபிவிருத்திப் பணி தொடர்ந்து செல்கிறது என கல்வி இராஜாங்க அமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

Post A Comment: